1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (12:32 IST)

மனிஷா யாதவ் குற்றச்சாட்டுக்கு அடுக்கடுக்காக கேள்விகளை வைத்த இயக்குனர் சீனு ராமசாமி!

இயக்குனர் சீனுராமசாமி பற்றி பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறிய குற்றச்சாட்டு ஒன்று சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் பேசிய பிஸ்மி ”சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் படத்தில் நடிக்க ஒப்பந்தமான மனிஷா ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற போது அவருக்கு பல விதங்களில் சீனு ராமசாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததால் ஒரு வாரம் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்த நிலையில் மனிஷா அந்த படத்தில் இருந்து வெளியேறினார். சென்னை வந்தபிறகு எனக்கு போன் போட்டு அவர் என்னவெல்லாம் தொந்தரவு கொடுத்தார் என்று பேசினார். அதற்கான எல்லா ஆதாரமும் என்னிடம் உள்ளது. சீனு ராமசாமியால்தான் அவர் சினிமாவை விட்டே வெளியேறினார்” என ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் பிஸ்மியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள இயக்குனர் சீனுராமசாமி “வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார்.. ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க.. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க.. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க... இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவோடு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு குப்பைக் கதை படத்தின் ஆடியோ ரிலீஸில் பேசும் மனிஷா யாதவ் இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி தெரிவித்து பேசியுள்ளார். இதன் மூலம் தான் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்று சீனுராமசாமி பதிவு செய்துள்ளார். இதில் சம்மந்தப்பட்ட நடிகை மனிஷா யாதவ் இதுபற்றி பேசினால்தான் உண்மை தெரியவரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இப்போது மனிஷா யாதவ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “என்ன மாதிரியான சீனு ராமசாமி படத்தில் நான் நடிக்கிறேன். நான் இதை இப்போதுதான் கேள்வி படுகிறேன். ஒரு விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி சொன்னது போல அவருக்கும் நான் நன்றி சொன்னதால் எதுவும் மாறிவிடாது. நான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சொன்ன வார்த்தைகளில் இன்றும் உறுதியாக இருக்கிறேன். என்னை அவமரியாதையாக நடத்திய ஒருவரின் படத்தில் நான் ஏன் நடிக்க வேண்டும். சீனு ராமசாமி சார் உங்கள் தகவல்களை சரியாக சொல்லுங்கள்.” என்று கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் “நான் அமைதியாக இருப்பதால் என்னைப் பற்றி சொல்லப்படும் எதுவும் உண்மை என்றாகிவிடாது. ஏனென்றால் அதை உறுதிபடுத்த நான் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது மனிஷாவுக்கு பதிலளிக்கும் விதமாக தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார் சீனு ராமசாமி.
சில கேள்விகள் flash back ..........................

1) இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மணிஷா,
2) படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்?
3) விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பீலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது ஏன் மறுத்தார் ?
4) என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..?
5) மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில் தன் தயாருடன் தங்கிருந்த மனிஷா அவர்களை கடைசி ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன்.
6) அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன். தெய்வம் அருளனும் இருப்பினும் உங்களோடு திரும்ப பணி புரிய விரும்பினேன்.

நவீன இலஷ்மி காந்தன் பிஸ்மி அவர்களுக்கு அண்ணன் பிஸ்மி ஒவ்வொரு நாள் தன் பேச்சை எனக்கு அனுப்புவார். ஒரு பூ வாட்ஸ்சப்பில் அவருக்கு போடுவேன் கடைசியில் மலர் அஞ்சலி எனக்கு வைக்க முயல்வார் என நான் எதிர் பார்க்கவில்லை.

மாமனிதன் பெற்ற விருதுகளை பிண அலங்காரம் என வசை பாடியது எனக்கு வலித்தது, மாமனிதன் உலகம் போற்றிய ஒரு சினிமா, அதனால் உங்களை ஒருமையில் எழுதி விட்டேன். ஏன் கடந்த ஒன்னரை வருடமாக என்னை டார்க்கெட் செய்து வலை பேச்சில் 20 வீடியோ பேசினீர்கள் பிஸ்மி அண்ணா?
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலமாக பேசி பின் நானே அண்ணே என்னை நெகட்டிவா சொல்ல வேண்டாம் என கெஞ்சிய வாய்ஸ் நோட்ஸ் அனுப்பினேன் மூன்று மாதம் முன்பு.

ஆண்களை படத்தில் நீக்கினால் சிறந்த டைரக்டர் அதுவே பெண்களை நீக்கினால் பாலியல் பழியா?

உங்கள் மனைவியார் என் வீட்டுக்கு புகைப்பட கலைஞரோடு வந்து என் அம்மாவை பேட்டி எடுத்தாங்க என்னையும் என் அம்மாவையும் இணைத்து படமும் எடுத்தாங்க அந்த பேட்டியை நன்றியோடு என்றும் நினைப்பேன். அன்பன் சீனு ராமசாமி