வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2016 (11:32 IST)

ரகசிய திருமணம் செய்து கொண்டாரா இலியானா?

காதலில் விழும் நடிகைகள் குறித்து, ரகசிய திருமண செய்திகள், வதந்திகள் வருவது இயற்கைதான். அவர்கள் திருமணம் செய்யும்வரை இந்த வதந்திகள் உயிர்த்திருக்கும்.
 

 
ஆனால், இலியானா குறித்த இந்த திருமண செய்திக்கு நம்பகத்தன்மை அதிகம்.
 
இலியானாவும், ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஆண்ட்ரூவும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் லிவ் டுகெதராக வசிப்பதாகவும் செய்திகள் வந்தன. 
 
இவர்கள் கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்ட்ரேலியாவில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணச் செய்தி தனது நடிப்பு கரியரை பாதிக்கும் என்பதால் அதனை இலியானா வெளியிடாமல் உள்ளார் என்கிறார்கள்.
 
இலியானாவின் விளக்கத்துக்காக மீடியாக்கள் காத்திருக்கின்றன.