செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2020 (17:26 IST)

14 வயதில் நடித்த காட்சிகள்....சமூக வலைதளங்கள் வெளியானதால் பிரபல நடிகை தற்கொலை முயற்சி !

நடிகை சோனா ஆபிரகாம் தற்போது சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நடித்த ஃபார் சேல் என்ற படத்தில்  படுக்கை அறைக் காட்சிகள் சமூக வலைதளங்கள் முதல் ஆபாச தளங்கள் வரை  வெளியானதால் அவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சோனா ஆபிரகாம் தனது 14 வயதில் காதல் சந்தியாவுக்குத் தங்கையாக ஒரு ஃபார் சேல் என்ற மலையாளப்படத்தில் நடித்தார்.

இப்படத்தில் இயக்குநர் சதீஷ் அனந்தபுரி என்பவர் ஒரு பலாத்தாகர காட்சியில் தங்கை சோனாவை பலாத்காரம் செய்வதுபோலவும் அதைப் பார்த்து காதல் சந்தியா தற்கொலை செய்வதுபோலவும் காட்சி அமைந்தார்.

இப்படம் வெளியானபோது இக்காட்சிகள் இல்லாமல் எடிட் செய்யப்பட்டு வெளியானது.இந்நிலையில் இந்தக் காட்சிகள் 2 ஆண்டுகள் கழித்து சமூக வலைதளங்களில் யாரோ பரப்பியுள்ளனர்.

இதுகுறித்து நடிகை சோனா கேரள மாநில முதல்வர், டிஜிபியைச் சந்தித்துப் புகார் அளித்தும் இந்த விடியோக்கள் நீக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ;தனக்கும் தன் குடும்பத்திற்கும் அவமானம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி அவர் முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.