1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Updated : வியாழன், 18 மே 2017 (15:32 IST)

கட்டப்பா வேடத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா?

உலகம் முழுவதும் வெளியாகி பல சாதனைகளை படைத்துவரும் படம் பாகுபலி 2. முதல் பாகத்தில் கட்டப்பா பாகுபலியை கொலை செய்வது போல் முடித்திருப்பார்கள். ஏன் பாகுபலியை கட்டப்பா கொன்றார் என்ற கேள்வி கடந்த இரு ஆண்டுகளாக மக்கள் விடை தேடிக்கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு கட்டப்பா பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.


 

இந்த நிலையில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜூக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டமே ஏற்பட்டுள்ளது. பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளனர். இதில் விசயம் என்னவென்றால் கட்டப்பா வேடத்திற்கு ராஜமௌலி முதலில் வேறு நடிகரைத்தான் தேர்வு செய்து வைத்திருந்தாராம். அவர் நடிகர் மோகன்லால். அவரிடம் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் சத்யராஜூக்கு அந்த வேடம் சென்றதாக கூறப்படுகிறது.