1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (11:43 IST)

சீன மொழியில் இன்று வெளியாகும் ‘கனா’: சத்யராஜ் வாழ்த்து!

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்பட பலர் நடித்த ’கனா’ திரைப்படம் தமிழில் மற்றும் தெலுங்கு மொழிகளில் மிகப் பெரிய வெற்றி பெற்றது, இந்த நிலையில் இந்த படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு இன்று வெளியாகிறது
 
சீனாவில் மொத்தம் 10 ஆயிரத்து 700 திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இன்று கனா படம் சீனாவில் வெளியானதை அடுத்து சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்
 
இன்று மார்ச் 18ஆம் டேதி சீனாவில் 10 ஆயிரத்து 700 திரையரங்குகளில் வெளியாகும் ’கனா’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன். ‘சூ ஹ’ என்றால் வாழ்த்துகிறேன் என்று சீன மொழியில் அர்த்தம் என்று கூறியுள்ளார்.