1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 31 மே 2024 (11:33 IST)

என் நண்பர் விஜிக்காக எழுதிய கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சி- சத்யராஜ் நெகிழ்ச்சி!

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் சரத்குமார் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் மூத்த நடிகர் விஜயகாந்த் ஒரு சிறப்பு வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த முடிவை படக்குழு கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விஜயகாந்த் நடிப்பதற்காக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளாராம். இதை மழை பிடிக்காத மனிதன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ள சத்யராஜ் “என்னுடைய நண்பர் விஜிக்கா எழுதப்பட்ட கதையில் நான் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியானது” எனக் கூறியுள்ளார்.