மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசரில் இளையராஜா பாட்டு… அடுத்த சர்ச்சையா?
விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.
இந்த படத்தில் சரத்குமார் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் மூத்த நடிகர் விஜயகாந்த் ஒரு சிறப்பு வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த முடிவை படக்குழு கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த டீசரின் முடிவில் இளையராஜாவின் உறவுகள் தொடர்கதை பாடல் இடம்பெற்றுள்ளது. சமீபகாலமாக இளையராஜா தன்னுடைய பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி படத்தில் பயன்படுத்துவோருக்கு நோட்டிஸ் அனுப்பி வருவது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் இந்த பாடல் உபயோகப்படுத்த பட்டிருப்பதால் படக்குழுவினர் இளையராஜாவிடம் உரிமையைப் பெற்றார்களா அல்லது ஆடியோ நிறுவனத்திடம் உரிமையைப் பெற்றார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.