வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (17:50 IST)

சதுரங்க வேட்டை சீக்வெலில் அரவிந்த்சாமி...?

சதுரங்க வேட்டை சீக்வெலில் அரவிந்த்சாமி...?

தனி ஒருவன் படத்துக்குப் பிறகு மோஸ்ட் வான்டட் நடிகராகிவிட்டார் அரவிந்த்சாமி. தமிழில் போகன் படத்தில் நடித்து வருகிறவர், இந்தியில் டியர் டாட் படத்தை முடித்துள்ளார்.


 


தனி ஒருவனின் தெலுங்கு ரீமேக்கிலும் அரவிந்த்சாமி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
சதுரங்க வேட்டை படத்தின் சீக்வெலில் நடிக்க அரவிந்த்சாமியை கேட்டுள்ளனர். ஆனால், அவர் இன்னும் தனது முடிவை சொல்லவில்லை. அதேபோல் ஹாலிவுட் படமொன்றில் அரவிந்த்சாமி விரைவில் நடிக்க உள்ளதாகவும் தகவல் உள்ளது.
 
ஏற்கனவே தனுஷ் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டு, தற்போது அதன் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்