1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 24 ஜூலை 2017 (21:49 IST)

ஓவியா ஐ லவ் யூ: நடிகர் சதீஷ் ப்ரபோசல்!!

காமெடி நடிகர் சதீஷ் பிக் பாஸ் ரசிகனாகிவிட்டார். அவருக்கும் பிடித்த போட்டியாளர் ஓவியாதான். தனது டிவிட்டர் பக்கத்தில் ஓவியாவிற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.


 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகள் சண்டைகள் இருந்தாலும் நிகழ்ச்சியை யாரும் பார்க்க தவறுவதில்லை. அதிலும் ஓவியாவிற்காக நிகழ்ச்சியை பார்க்கும் சிலரும் உள்ளனர்.
 
தற்போது நடிகர் சதீஷ் ஓவியாவிற்காக சில ட்விட்டுகளை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு ட்விட்டில் ஓவியாவிற்கு லவ் யூ சொல்லியுள்ளார்.