ஆலுமா டோலுமா.... லாஸ்லியா போட்ட குத்தாட்டம் - இணயத்தில் செம வைரல்!

papiksha| Last Updated: சனி, 15 பிப்ரவரி 2020 (15:16 IST)

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.
பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் ஆரி நடிக்கும் இப்படத்தின் பிக்பாஸ் அபிராமி, மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கிடையில் கடந்த
சில
நாட்களாகவே லாஸ்லியாவிற்கு பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற காதலர் தின ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லாஸ்லியா அங்கு ஒலிக்கப்பட்ட அஜித்தின் ஆலுமா டோலுமா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் அந்த வீடியோ சமூகவலைத்தளங்கில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...


இதில் மேலும் படிக்கவும் :