இயக்குனர் சசியின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்!
பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சசியின் அடுத்த படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர் சசி என்பதும் ரோஜாகூட்டம், டிஷ்யூம், பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு திரைப்படத்தை சசி இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் நாயகியாக சித்தி இட்னானி என்பவர் நடித்து வருகிறார் என்பதும் இவர் ஏற்கனவே சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சசியின் அடுத்த படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது