புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 அக்டோபர் 2018 (07:06 IST)

சர்கார் டீசர்: பார்வையாளர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனை

தளபதி விஜய் நடித்துள்ள 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வெளிவரவுள்ள நிலையில் இந்தப் படத்தின் டீசர் நேற்று மாலை சரியாக 6 மணிக்கு வெளியாகியது

இந்த படத்தின் டீசர் நேற்று வெளியான முதல் நிமிடம் முதல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சர்கார் டீசர் வெளியான 5 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சம் பேர் லைக் செய்து சாதனை செய்துள்ளனர். ஹாலிவுட் திரைப்பட டீசர் அவெஞ்சர்ஸ் 36 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்களை பெற்ற சாதனையை சர்கார் டீசர் 5 மணி நேரத்தில் முறியடித்துள்ளது.

மேலும் தற்போது வரை இந்த டீசருக்கு 11,088,680 பார்வையாளர்களும், ஒரு மில்லியன் லைக்ஸ்களும் கிடைத்துள்ளது. பார்வையாளர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டிஸ்லைக்குகளும் இந்த டீசருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.