புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:30 IST)

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சர்கார்!

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியால் சர்ச்சை எழுந்த நிலையில், மீண்டும் அதே மாதிரியான சர்ச்சை கிளம்பியுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி, பழ.கருப்பையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்பட்த்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வரும் 6ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு இப்படம் வெளியாகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியால் சர்ச்சை எழுந்த நிலையில், மீண்டும் அதே மாதிரியான சர்ச்சை கிளம்பியுள்ளது. நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. யாரெல்லாம் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டரை படங்களில் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் மீது புகையிலை கட்டுப்பாட்டு சட்டங்களின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை எழுந்துள்ளது.