ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (09:43 IST)

வனிதா-ஷெரின் மோதல்: கவின் குழுவினர் கொண்டாட்டம்

பிக்பாஸ் வீட்டில் கவின் கூட்டணியை தனி ஆளாக எதிர்த்து ஆட்டம் போட்டு வந்த வனிதாவுக்கு சமீபத்தில் ஷெரின் மற்றும் சாக்சியின் ஆதரவு கிடைத்ததால் அந்த அணி கூடுதல் பலம் பெற்றது. எனவே வனிதாவின் அணியை கவின் அணி சமாளிப்பது கடினம் என்றே தோன்றியது
 
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் திடீரென வனிதாவும் ஷெரினும் முட்டி மோதிக்கொண்டதை பார்த்து கவின் அணியின் கொண்டாடி வருகின்றனர். தனக்கும் தர்ஷனுக்கும் காதல் இருப்பதாக நீ எப்படி சொல்லலாம் என வனிதாவை ஷெரின் எகிற, வனிதாவே ஷெரினின் இந்த ஆவேசத்தை எதிர்பார்க்காமல் அதிர்ச்சி அடைகிறார். இதனிடையே தர்ஷனும் ஷெரினுக்கு ஆதரவாக களமிறங்க, வனிதாவின் இன்னொரு ஆதரவாளரான சாக்சியும் வனிதா மீது அதிருப்தி அடைகிறார். எனவே மீண்டும் வனிதா தனித்து விடப்படுகிறார்.
 
பிக்பாஸ் வீட்டில் வனிதா ரீஎண்ட்ரி ஆனதில் இருந்தே பிரச்சனை அதிகமாகி வருகிறது. வனிதாவின் வத்திக்குச்சி வேலையால்தான் அபிராமி, சாக்சி, மதுமிதா ஆகியோர் வெளியேறினர். தற்போது ஷெரினையும் உசுப்பேத்தி அவரையும் வெளியேற்றுவதுதான் வனிதாவின் திட்டமா? என்று எண்ண தோன்றுகிறது