1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:38 IST)

பல ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் படத் தயாரிப்பாளரை சந்தித்த சரத்குமார்!

சூரியன் படத்தின் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோனை சரத்குமார் விமான நிலையத்தில் சந்தித்துள்ளார்.

வில்லன் நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய சரத்குமாருக்கு முதல் வெற்றிப்படமாக அமைந்த படம் என்றால் அது சூரியன்தான். அந்த படத்தை இயக்குனர் பவித்ரன் இயக்க கே டி குஞ்சுமோன் மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

ஆனால் அதன் பிறகு இருவரும் இணைந்து படத்தில் பணிபுரியவில்லை. கே டி குஞ்சுமோனின் தயாரிப்புகள் படுதோல்வி அடைந்தன. அதனால் சினிமா தயாரிப்பில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு விமான நிலையத்தில் கே டி குஞ்சுமோனை சந்தித்த புகைப்படத்தை சரத்குமார் வெளியிட்டுள்ளார்.

மேலும் ‘"என் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த, மிகப்பெரிய வெற்றிப் படமான 'சூரியன்' திரைப்படத்தைத் தயாரித்த கே.டி.குஞ்சுமோனை விமான நிலையத்தில் சந்திக்க நேரிட்டது. வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி இருவரும் பேசிக்கொண்ட போது, வாழ்க்கையில் கடந்துவந்த பாதையின் நிகழ்வுகளை மறக்காமல் நினைவில் கொண்டிருப்பவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் என்று என்னை ஆசிர்வதித்தது நெகிழச் செய்தது" எனக் கூறியுள்ளார்.