மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சந்தோஷ் நாராயணன்!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து நிற்கும் சந்தோஷ் நாராயணன் இப்போது முதல் முறையாக ஒரு மலையாளப் படத்துக்கு இசையமைக்க உள்ளார்.
அட்டக்கத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் அதன் பின்னர் பீட்சா, சூதுகவ்வும் என வெரைட்டியான ஆல்பங்களைக் கொடுத்து கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் ரஜினியின் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களினால் ஸ்டார் இசையமைப்பாளராக மாறினார். இப்போது தமிழின் தவிர்க்க இயலாத இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்நிலையில் இப்போது அவர் துல்கர் சல்மான் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் சல்யூட் எனும் மலையாளப் பட்த்துக்கு முதல் முதலாக இசையமைக்க உள்ளார்.