1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (12:14 IST)

ஜோக்கருக்கு ஜோடியாக நடிக்கும் சாந்தினி

‘ஜோக்கர்’ படத்தில் ஹீரோவாக நடித்த குரு சோமசுந்தரம் ஜோடியாக நடித்து வருகிறார் சாந்தினி தமிழரசன்.




 
கே.பாக்யராஜ் இயக்கிய ‘சித்து +2’ படத்தில் ஷாந்தனு பாக்யராஜ் ஜோடியாக அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். சென்னையைச் சேர்ந்த இவர், தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், சின்னச் சின்ன கேரக்டர்களில் கூட நடித்து வருகிறார். அதனால், இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன.

தற்போது, குரு சோமசுந்தரம் ஜோடியாக ஒரு த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் மூலம் மனோஜ் இயக்குநராக அறிமுகமாவதோடு, படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது