சந்தானத்திடம் சரணடைந்த ராஜேஷ்
சந்தானத்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுக்கிறார் எம்.ராஜேஷ்.
‘சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எம்.ராஜேஷ். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய மூன்று படங்களுமே தோல்வியைத் தழுவின. எனவே, சந்தானத்தை ஹீரோவாக வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறார்.
ராஜேஷின் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை, விஜய்யின் ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்திருக்கும் தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. சந்தானம் முதன்முதலாக ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இந்த நிறுவனம்தான் ரிலீஸ் செய்தது.