வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 6 மே 2024 (18:24 IST)

கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புசெழியன் வழங்க,சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'இங்க நான் தான் கிங்கு' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு!

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில்,  நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், 'இங்க நான் தான் கிங்கு'. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு,  நடைபெற்றது.
 
இந்நிகழ்வினில்…. 
 
நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது…
 
இந்த படத்தில் நடித்ததற்கு நான் மிக சந்தோஷப்படுகிறேன் எனக்கு நல்ல சம்பளம் தந்தார்கள். இதற்கு முன் 'வெள்ளக்கார துரை' படம் செய்தேன், என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். மிகச்சிறந்த தயாரிப்பாளர். சந்தானம் சாரை புகழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள் அவர் உங்களுக்கு அதிகம் வாய்ப்பு தரவில்லை என சொல்கிறார்கள் ஆனால் என் வாழ்க்கைக்கே அவர் தான் அதிகம் வாய்ப்பு தந்துள்ளார். இந்தப்படத்திற்கும் அவர் தான் வாய்ப்பு வாங்கி தந்தார். அவருக்கு என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன். இப்படத்தில் இமான் சார் நல்ல பாடல்கள் தந்துள்ளார். என்னை தியேட்டருக்கு வராதே என பலர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இந்தக்காலத்தில் நேரடியாக சென்று விளம்பரம் செய்தால் தான் படத்திற்கு கூட்டம் வரும். நான் என்னால் முடிந்ததை செய்வேன். 'இங்க நான் தான் கிங்கு' மிகப்பெரிய வெற்றியடையும். 
 
இயக்குநர் ஆனந்த் நாராயண் பேசியதாவது...
 
இதுவரையிலும் படத்திற்கு ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அன்பு சார் கதை கேட்கிறார் என்றதும் அவரை நெருங்க முயற்சித்தேன். செந்தில் சார் மூலம் தான் அவரை சந்தித்தேன். ஒரு படம் செய்வதாக கதை சொன்னார்கள், உடனே  ஒப்புக்கொண்டேன். எனக்காக முழு டீமையே கொடுத்தார்கள். படம் டாக்கி போர்ஷன் முடித்தவுடன் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்.  சந்தானம் சாரை 'இந்தியா பாகிஸ்தான்' படத்திற்காக சந்தித்துள்ளேன், அவருக்கு நான் ரசிகன். இப்போது அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதல் நாளே என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். ஷூட்டிங்கில் செட்டிலேயே இருந்து என்னுடன் விவாதிப்பார். அவர் டீமுக்கு முக்கியமாக நன்றி. இமான் சார் மியூசிக் அட்டகாசமாக வந்துள்ளது. சந்தானம் சார் எமோஷன் காட்சி ஒன்று இருக்கிறது, அதில் சந்தானம் சாரா இசையா என போட்டியே இருக்கும். சந்தானம் சாருக்கு இணையாக புதுமுகம் லயா சூப்பராக நடித்துள்ளார். தம்பி ராமையா சார் அருமையாக நடித்துள்ளார்.  எல்லோருடைய பெஸ்ட் இந்தப்படத்தில் தந்துள்ளனர் அனைவருக்கும் என் நன்றிகள்.  தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடும் படமாக இது இருக்கும், அதற்கு ரைட்டருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மே 10 படம் பார்த்து ஆதரவு தாருங்கள். 
 
தம்பி ராமையா பேசியதாவது...
 
'இங்க நான் தான் கிங்கு', குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். இப்போது படங்கள் நிறைய விவாதிக்கப்படுகிறதுமலையாள படங்கள் பற்றி சொல்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் தாய் தமிழ் சினிமா தான். முன்பெல்லாம் தயாரிப்பு தரப்பில் கதை இலாகா இருக்கும். ஒரு கதை தயாராக பல அடுக்குகள் இருக்கும் தேவரய்யா ஆரம்பித்து ஆர் பி சௌத்திரி வரை கதையை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் மிகுந்த கவனம் இருக்கும். அது போல் கோபுரம் பிலிம்ஸ் தேர்ந்தெடுத்து படம் செய்கிறார்கள். அன்புசெழியன் சார் தனது மகளை இந்த துறைக்கு கூட்டி வந்துள்ளார். தெளிவானவராக இருக்கிறார், வாழ்த்துகள் மகளே. இப்படம் காம வாடை இல்லாத காமெடிப்படம்.  
 
நல்ல கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். அன்பு தம்பி இமான் பெரிய அளவில் சிறப்பான பாடல்கள் தந்துள்ளார். சந்தானத்தின் வெற்றிக்கு காரணம் அவர் மனது தான். அவர் நிஜ ஹீரோ. தன் பழைய நண்பர்களை வைத்து காப்பாற்றுவது மிகப்பெரிய விஷயம். ஒரு காட்சியை கடைசி ரசிகன் வரை ரசிக்க வெண்டும் என்பதில் கடும் முயற்சி செய்வார் சந்தானம். அவருடன் பயணிப்பது மிகுந்த சந்தோஷம்.
 
லியா அறிமுக நடிகை என்ற தயக்கம் இல்லாமல் எங்களுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார், நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துகள். இப்படத்தில் முழு நீள காமெடி பாத்திரம் செய்துள்ளேன். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். மே 10 அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி. 
 
நடிகை பிரியாலயா பேசியதாவது...
 
இந்த நாள் எனக்கு மிக முக்கியமான நாள். என் முதல் பட மேடை, கடவுளுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி. என் தயாரிப்பாளர் அன்பு சார், சுஷ்மிதா மேடம் இருவருக்கும் நன்றி. எப்போதும் ஆதரவாக என்னை விசாரித்து பார்த்துக்கொண்டார்கள். கோபுரம் பிலிம்ஸில் என் முதல் படம் செய்ததை பெருமையாக நினைக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த சந்தானம் சார், அவருடன் பழகிய யாருக்கும் அவரை பிடிக்காமல் போகாது. அவ்வளவு எளிமையானவர். முதலில் செட்டில் என்னுடன் இங்கிலீஷில் பேசினார். அவருக்கு நான் தமிழ் என்பது தெரியாது, நான் சொன்ன பிறகு ஜாலியாக பேசினார் அவருடன் நடித்தது மகிழ்ச்சி. கேப்டன் கூல் ஆனந்த் சார் ஜாலியாக பேசி வேலை வாங்கி விடுவார். தம்பி ராமையா சாரின் எனர்ஜி பிரமிப்பாக இருக்கும். அவர் தமிழுக்கு ரசிகை நான். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும்  என் நன்றிகள். மியூசிக் தான் படத்தின் ஆன்மா. இமான் சாருக்கு என் நன்றிகள். படம் பார்த்து ஆதரவு தாருங்கள். 
 
இசையமைப்பாளர் இமான்  பேசியதாவது...
 
கோபுரம் பிலிம்ஸில் 'வெள்ளக்கார துரை' படம் செய்துள்ளேன். ஒரு இடைவேளைக்குப் பிறகு அன்புசெழியன் சாருடன் இணைகிறேன். என் மீது அவருக்கு தனித்த அன்பு இருக்கிறது. அவர் எல்லாப் படத்திலும் என் இசை இருக்க வேண்டுமென நினைப்பார்.  அவருக்கு என் நன்றிகள். இப்படம் மூலம் அறிமுகமாகும் சுஷ்மிதாவிற்கு வாழ்த்துக்கள்.  சந்தானம் சார் காமெடி தான் என் வீட்டில் ஓடிக்கொண்டே இருக்கும், அவருடன் வேலை பார்க்க வேண்டுமென பல காலமாக ஆசைப்பட்டேன், அது இந்தப்படத்தில் அமைந்தது மகிழ்ச்சி. ஒரு ஹீரோயினுக்கு ஒரு வெற்றிப்பாடல் அமைந்தால் அது மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும் 'மாயோன்...' பாடல் லயாவுக்கு மிக அருமையான பாடலாக அமைந்துள்ளது. சந்தானம் சாரும் கலக்கியுள்ளார். இப்படத்தில் மூன்று பாடல்கள்.  'மாயோன்...' எனக்கு நெருக்கமான பாடல், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார், அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் காமெடியைத் தாண்டி எமோஷனல் காட்சிகளிலும் சந்தானம் அசத்தியுள்ளார். இசையில் பல காட்சிகள் சவாலாக இருந்தன. மிக மகிழ்ச்சியாகவும் இருந்தது. 
 
சுஷ்மிதா அன்புசெழியன் பேசியதாவது… 
 
என்னை தயாரிப்பாளராக்கிய அப்பாவுக்கு நன்றி. நான் படம் பார்த்து விட்டேன். குடும்பத்தோடு என்ஜாய் செய்து பார்க்கும் படமாக இருக்கும். சந்தானம் சார் கலக்கியிருகிறார். லயா அருமையாக நடித்துள்ளார். ஒரு கலக்கலான விருந்தாக இப்படம் இருக்கும்.
 
தயாரிப்பாளர் அன்புசெழியன் பேசியதாவது… 
 
சந்தானம் சாரை வைத்து ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். கொஞ்ச காலம் தயாரிப்பில் இல்லை. இந்தக்கதை வந்த போது சந்தானம் சரியாக இருப்பார் எனத் தோன்றியது.  அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்.  என்னுடைய பார்ட்னராக சரிகமா ஆனந்த் இணைந்துள்ளார், அவருக்கு நன்றி. தம்பி ராமையா சார், நாயகி லயா, கூல் சுரேஷ் எல்லோருக்கும் வாழ்த்துகள். இமான் சார் அருமையான பாடல்கள் தந்துள்ளார். சந்தானம் சார் இந்தப்படத்திற்காக ஸ்பெஷலாக உழைத்து தந்தார், நன்றி. செல்லா இந்தப்படத்திற்காக எனக்காக வந்து உழைத்து தந்தார் அவருக்கு என் நன்றிகள். அவருடன் படம் செய்ய பேசிக்கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்து இன்னும் நிறைய படம் செய்யவுள்ளேன், உங்கள் ஆதரவைத் தாருங்கள். முதன் முதலாக தனது எக்ஸ் தளத்தில் இப்படத்தைப் பற்றி பதிவிட்டு எங்களுக்கு ஆதரவு தந்த உலக நாயகன் கமலஹாசன் சாருக்கு நன்றி. என் மகள் சுஷ்மிதா இப்படம் மூலம் திரைத்துறைக்கு வந்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள். படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி. 
 
நடிகர் சந்தானம் பேசியதாவது… 
 
'இங்க நான் தான் கிங்கு' படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான். அவர் ஆபிஸுக்கு வராத ஹீரோவே இல்லை. அவரிடம் நானே காசு கேட்டுதான் போனேன், என்னை அவருக்கு பிடித்தது, வீடு வாங்க காசு கேட்டுப்போனேன், ஆனால் அப்படி செய்யாதீர்கள், படத்திற்கு அட்வான்ஸ் தருகிறேன், படம் செய்யலாம் என்றார். அவர் மனதளவில் மிக நல்ல மனிதர். என்னுடன் எப்போதும் ஜாலியாக பேசுவார். அவர் என்னிடம் இந்தப்படம் செய்யலாம் என்றார், எனக்கும் பிடித்திருந்தது என்றவுடன் உடனே செய்யலாம் என்றார். அவருடன் இணைந்து படம் செய்தது சந்தோஷம். படம் பார்க்க வருபவர்கள் சிரித்துவிட்டு போக வேண்டும் என்றார், தயாரிப்பாளராக இல்லாமல் தியேட்டர் ஓனராக  இப்படத்தை எடுத்துள்ளார். சுஷ்மிதா என் படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார், வாழ்த்துகள். இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார், நன்றி. இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார். தம்பி ராமையா சார் மாதிரி இண்டலிஜண்ட் பார்க்க முடியாது, அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக்கும். அவர் இப்படத்தில் அருமையான பாத்திரம் செய்துள்ளார். ஹீரோயின் லயா நம்ம சேலத்துப் பெண், அவரை பாலிவுட் என நினைத்தேன் நன்றாக நடித்துள்ளார். என் படத்தில் எப்போதும் இருக்கும் மாறன், சேஷு, கூல் சுரேஷ், மனோபாலா என நிறைய பேர் இதிலும் இருக்கிறார்கள். 'கட்டா குஸ்தி' படம் ஹிட் தந்துவிட்டு இப்படத்தில் வந்து எங்களுக்காக உழைத்து தந்த செல்லா அய்யாவு சாருக்கு நன்றிகள். 90 கிட்ஸ் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.