போலீஸ் அதிகாரியாக மாறிய சந்தானம்


bala| Last Modified வெள்ளி, 28 அக்டோபர் 2016 (11:09 IST)
தில்லுக்கு துட்டு வெற்றிக்குபின் புதிய படம் ஒன்றில் நடிகர் சந்தானம் போலிஸ் வேடத்தில் நடிக்கிறார்.

 

பாஸ் என்கிற பாஸ்கரன், நான் கடவுள், நிமிர்ந்து நில் போன்ற வெற்றி படங்களை தயாரித்தவ்ர் வாசன் பிரதர்ஸ். கடந்த 60 ஆண்டுகளாக படத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் இவர்கள் தற்போது ஒரு பக்க கதை என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களது நிறுவன தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஓடி ஓடி உழைக்கனும் என்று பெயரிடப்பட்டுள்ளது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய கே.எஸ். மணிகண்டன் இப்படத்தை இயக்கிறார். சந்தானம் சில படங்களில் சில காட்சிகளில் போலீஸாக நடித்துள்ளார். ஆனால் போலீஸ் வேடத்தில் நாயகனாக இப்படத்தில் நடிக்க உள்ளார்.முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் தயாராக உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :