மாவீரன் படம் மேலும் தாமதம்… தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் லைன் அப்!
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் மோதல் உச்சத்தை எட்டி படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பும் சமாதானமாகி படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கார்ட்டூன் கலைஞராக நடிக்கிறாராம். அவர் கற்பனையாக வரையும் கார்ட்டூன்கள் நிஜத்தில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.
இதுவரை 50 நாட்களுக்கு மேல் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துள்ள நிலையில் இன்னும் பாதி படம் கூட முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் எதிர்பார்த்ததை விட இன்னும் அதிக நாட்கள் ஷூட்டிங் நடத்த வேண்டிய சூழல் உள்ளதால், சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.