ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (07:07 IST)

சம்பளத்தை சொல்லி ஆர் பி சௌத்ரிக்கு ஷாக் கொடுத்த சந்தானம்… !

சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இப்போது அந்த படத்தின் மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுத்து ரிலீஸ் செய்தனர்.

இந்நிலையில் இந்த படம் திரையரங்கின் மூலமாக மொத்தம் 30 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து சந்தானத்தின் கேரியர் பெஸ்ட் வசூலை கொடுத்தது. இதையடுத்து ஜி5 ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க நடிகர் ஜீவாவின் அப்பா ஆர் பி சௌத்ரி விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்காக ஒரு பட்ஜெட்டையும் சந்தானத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் சந்தானம் சொன்ன அவரது சம்பளமே படத்தின் பட்ஜெட்டில் 80 சதவீதம் எடுத்துக் கொண்டதாம். அதனால் ஆர் பி சௌத்ரி யோசிக்க, இப்போது சந்தானத்தின் அந்த படத்தை ஆர்யா தயாரிக்க முடிவு செய்துள்ளாராம்.