திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2024 (09:24 IST)

படத்தில் சர்ச்சைக் காட்சிகள் இல்லை… வடக்குப்பட்டி ராமசாமி இயக்குனர் கருத்து!

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து முடித்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கி உள்ளார் என்பதும் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவுகள் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலர் ரிலீஸானது. இந்த டிரைலரில் மறைந்த திராவிடர் கழக தலைவர் பெரியாரை நக்கல் செய்வது போல சில வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த டிரைலர் வெளியானதில் இருந்து சமூகவலைதளத்தில் பெரியாரிய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போது படத்தை வெளியிடுவதில் இருந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விலக, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் கார்த்திக் யோகி “படம் ஒரு கற்பனையான கிராமத்தில் 1974 ஆம் ஆண்டு நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சர்ச்சையான எந்த காட்சிகளும் இல்லை. படம் பார்க்கும்போது அது புரியும்” எனக் கூறியுள்ளார்.