வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:32 IST)

முகினை அடுத்து சாண்டி வீட்டிலும் நடந்த சோகம்: சக போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் 3 டைட்டில் வின்னர் முகின் தந்தையார் இன்று காலை மலேசியாவில் தனது இல்லத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி பிக்பாஸ் போட்டியாளர்களை அதிர்ச்சியடைய செய்தது. முகினுக்கு சக போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் இரங்கலை போனிலும் சமூக வலைத்தளங்களிலும் தெரிவித்து வண்ணம் உள்ளனர். 
 
இந்த நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பெற்ற சாண்டியின் மாமனார் இன்று திடீரென மரணம் அடைந்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. சாண்டியின் மாமனார் டேவிட் சுந்தர் ராஜ் என்பவர் இன்று திடீரென காலமாகிவிட்டதாக வெளிவந்துள்ள செய்தி பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை அளித்துள்ளது.,
 
இதனையடுத்து சாண்டிக்கும் அவரது மனைவிக்கும் தங்களது ஆழ்ந்த இரங்கலை பிக்பாஸ் போட்டியாளர்களும் சாண்டியின் ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் 3 போட்டியாளர்களின் வீடுகளில் அடுத்தடுத்து சோகம் நிகழ்ந்துள்ளது சக போட்டியாளர்கள் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது