வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2017 (06:20 IST)

நரேன் கார்த்திக்கின் 'நரகாசுரனில் 3வது நாயகன் இவர்தான்

இந்த ஆண்டு வெளியான வெற்றி படங்களில் ஒன்று 'துருவங்கள் 16'. இளம் இயக்குனரன கார்த்திக் நரேன் இயக்கிய இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் திருப்தியான வசூல் ஆகியவற்றால் உடனடியாக அவருக்கு அடுத்த பட வாய்ப்பும் கிடைத்தது. இயக்குநர் கார்த்திக் நரேன் அடுத்து இயக்கவுள்ள ’நரகாசுரன்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த மாதமே தொடங்கிவிட்டது.



 


இந்த படத்திற்கு 'நரகாசூரன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மூன்று ஹீரோக்கள் என்று ஏற்கனவே கார்த்திக் அறிவித்திருந்த நிலையில் அரவிந்த்சாமி மற்றும் இந்திரஜித் ஆகியோர் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது கதாநாயகனாக சந்தீப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் கூறியபோது, 'சந்தீப் தற்போது எங்கள் அணியில் இணைந்துள்ளார். வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை துவங்க இருக்கிறோம். ஆனால் இந்த படம் 2018-ஆம் ஆண்டுதான் திரைக்கு வரும். நரகாசுரன் படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதம் வெளியிடப்படும். மாயா படத்திற்கு இசையமைத்த ரோன் ஈதன் யோகன், நரகாசுரன் படத்திற்கு இசையமைக்கிறார்' என்று கூறினார். இந்த படத்தை கார்த்திக், இயக்குநர் கெளதம் மேனன் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.