1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (16:40 IST)

இப்படி எல்லாமா கிளப்புவீங்க… அமீர்கான் பட நடிகை பதில்!

பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 

தற்போது 53 வயதாகும் அமீர்கானுக்கு 1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு மனைவி ரனா தத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணத்தால் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதையடுத்து 2005ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். கிரண் ராவ் அமீர்கான் நடித்த லகான் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர்கள் இருவருக்கும் அசாத் ராவ் கான் என்ற மகன் பிறந்தார்.

இதையடுத்து அண்மையில் அமீர் கான் மனைவி கிரண் ராவ்வை திடீர் விவாகரத்து செய்து அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.  இந்நிலையில் அமீர்கான் தங்கல் படத்தில் தனக்கு மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக்கை 3ம் திருமணம் செய்யப்போவதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இதை சனா மறுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சனா ‘முன்பெல்லாம் இதுபோன்ற வதந்திகளைக் கேட்டால் வருத்தமாக இருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை’ எனக் கூறியுள்ளார்.