ஏன் தான் கேப்டனானேனோ? கமல்ஹாசனிடம் புலம்பிய சம்யுக்தா!
ஏன் தான் கேப்டனானேனோ? கமல்ஹாசனிடம் புலம்பிய சம்யுக்தா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கேப்டன் ஆன சம்யுக்தா தனது பெயரை தானே கெடுத்துக் கொண்டதாகவே பார்வையாளர்கள் கருதுகின்றனர். பாலாஜியின் உதவியால் கேப்டன் ஆனார் என்ற பழி அவர்மீது சுமத்தப்பட்டது மட்டுமின்றி கேப்டன் என்ற பதவியை அவர் தவறாக பயன்படுத்தியதாகவும் குறிப்பாக ஆரி விஷயத்தில் அவர் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் அவர்களிடம் நான் ஏன் தான் கேப்டன் ஆனேன் என்று இருக்கிறது என்று சம்யுக்தா புலம்ப அதற்கு கமல்ஹாசன் உங்களை கேப்டன் ஆக்கி அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டார் பாலாஜி என்று கூற, அது உண்மைதான் என்று சம்யுக்தா கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
பாலாஜி தனது தந்திரங்களில் ஒன்று கமல்ஹாசன் மூலம் வெளி வந்து விட்டதை பார்த்து அதிர்ச்சியுடன் இருப்ப்தோடு இன்றைய கடைசி புரமோ வீடியோ முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது