1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (17:06 IST)

தனுஷின் ‘வாத்தி’ படத்தின் ஹீரோயின் இவர்தான்!

தனுஷின் ‘வாத்தி’ படத்தின் ஹீரோயின் இவர்தான்!
தனுஷ் நடிக்கவிருக்கும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டது என்ற என்பதை பார்த்தோம், இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சம்யுக்தா மேனன் தற்போது இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தனுஷுடன் இணைந்து நடிப்பதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் சம்யுக்தா மேனன் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்