1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (19:04 IST)

தவறெனில் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும்.. சமுத்திரக்கனியின் திரு மாணிக்கம் டீசர்..!

thiru manickam
சமுத்திரக்கனி நடித்த திரு மாணிக்கம் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வீடியோ சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த டீசர் வீடியோவில் சமுத்திரகனி காட்டு பகுதியில் போலீசுக்கு பயந்து பதுங்கி இருக்கும் நிலையில் அவரை பிடிக்க போலீஸ் படையை காட்டுக்குள் நுழைகிறது என்பதும் போலீஸ் இடம் இருந்து அவர் தப்பித்தாரா என்பதுதான் இந்த படத்தின் கதை என்பதும் டீசரிலிருந்து தெரிய வருகிறது. 
 
சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், ஸ்ரீமான் வடிவுக்கரசி, இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். நந்தா பெரியசாமி இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகிய இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது