செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (20:16 IST)

வில்ஸ்மித் மனைவிக்கு வந்த அதே நோய் எனக்கு: அஜித், சூர்யா பட நடிகை

வில்ஸ்மித் மனைவிக்கு வந்த அதே நோய் எனக்கு: அஜித், சூர்யா பட நடிகை
வில்ஸ்மித் மனைவிக்கு வந்த அலோபேசியா என்ற நோய் தனக்கு வந்திருப்பதாக அஜித் மற்றும் சூர்யா பட நடிகை தெரிவித்துள்ளார்
 
அஜீத் நடித்த அசல், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி 
 
இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் ஸ்மித் மனைவிக்கு வந்த அதே அலோபேசியா நோய் எனக்கும் வந்ததாகவும் முடி பயங்கரமாக கொட்டியதாகவும் கூறினார் 
 
ஆனால் அதே நேரத்தில் சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றும் அதனால் தற்போது எனக்கு முடி கொட்டவில்லை என்றும் கூறியுள்ளார் இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது