திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (14:51 IST)

பிரிவுக்கு பின் இறந்துவிடுவேன் என நினைத்தேன்! – மனம் திறந்த சமந்தா!

நாகசைதன்யாவுடனான விவாகரத்துக்கு பிறகு தனது மனநிலை குறித்து நடிகை சமந்தா பேசியுள்ளார்.

நடிகை சமந்தாவுக்கு நாக சைதன்யாவுக்கு சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் நடந்த நிலையில், சமீபத்தில் அவர்கள் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அதுகுறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்ட சமந்தா தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது ஒரு ஆங்கில படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் நாக சைதன்யாவுடனான பிரிவு குறித்து பேசியுள்ள நடிகை சமந்தா “மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள். எங்கள் பிரிவுக்கு பிறகு நான் மனம் நொறுங்கி இறந்துவிடுவேன் என நினைத்தேன். ஆனால் என் மனவலிமையை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.