1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (19:06 IST)

’புஷ்பா’ படத்தின் சமந்தா பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 
இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார் என்பதும் அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இப்படத்தில் சமந்தாவின் பாடல் வரும் பத்தாம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்