செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (15:21 IST)

கிளாமர் க்யூனாக மாறிய சமந்தா… லேட்டஸ்ட் அட்டகாச போட்டோஷூட்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமந்தா டேக் 20 என்ற புதிய பாட்காஸ்ட் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதில் தான் சந்தித்த உடல் நலப் பிரச்சனைகள் பற்றியும் உடல்நலத்தை பேணுவதைப் பற்றியும் பேசப்போகிறாராம். இதன் முதல் வீடியோ பிப்ரவரி 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.

இப்போது அவர் பேமிலி மேன் இயக்குனர்கள் இயக்கும் சிட்டாடல் என்ற தொடரில் நடித்து வருகிறார். இது தவிர அவர் பாலிவுட்டில் திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கவர்ச்சியான உடையணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.