வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (14:55 IST)

கெட்ட வார்த்தை வாசகம் தாங்கிய சமந்தாவின் டிஷர்ட்!

நடிகை சமந்தாவின் சமீபத்தைய புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரின் ரசிகர்களும் மாறி மாறி மற்றவர்களை குற்றம் சொல்லிக் கொண்டு வந்தனர்.

இதையடுத்து சமந்தாவின் ஒவ்வொரு அசைவுகளும் ஊடகங்களாலும் ரசிகர்களாலும் கவனிக்கப்படுகின்றன. அவரின் பழைய புகைப்படங்கள் கூட இப்போது புதிது புதிதாக காரணம் கண்டுபிடிக்கப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகின்றன. அப்படி சமந்தா டிஷர்ட் அணிந்த ஒரு புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்குக் காரணம் அந்த டி ஷர்ட்டில் இடம்பெற்றுள்ள கெட்டவார்த்தைகள் அடங்கிய வாசகம்தான்.