1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:53 IST)

அடுத்து ஒரு படத்தில் குத்தாட்டம்… சமந்தாவின் அதிரடி முடிவு!

சமந்தா சமீபத்தில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊம் சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.

புஷ்பா படத்தின் மீதான எதிர்பார்ப்பை கடைசி நேரத்தில் கூட்டியதில் சமந்தா நடனமாடிய அந்த குத்துப் பாடலுக்கு முக்கியப் பங்குண்டு. அந்த பாடலில் சமந்தா இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி இருந்தார். பாடல் வரிகளும் சர்ச்சைகளை கிளப்ப பாடலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இளைஞர்கள் மத்தியில் பாடல் பிய்த்துக்கொண்டு போனது.

இந்நிலையில் இதேபோல மற்றொரு படத்திலும் நடனமாட சமந்தா சம்மதித்துள்ளார். விஜய் தேவாரகொண்டா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் லைகர் படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு ஆட படக்குழு அவரை அனுகியதாகவும், அதற்கு சமந்தா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.