வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 மே 2022 (15:07 IST)

விஜய் தேவரகொண்டா- சமந்தா இணைந்த குஷி… பரபரப்பாக நடக்கும் ஷூட்டிங்… வெளியான லேட்டஸ்ட் தகவல்

குஷி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் துல்கர் சல்மான் நடித்த நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்தார்கள் என்பது தெரிந்ததே. விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது, ஷிவ் நிர்வானா என்பவர் இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை தற்போது சமந்தா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். குஷி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டி டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார் சமந்தா. இது சம்மந்தமான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இது சம்மந்தமாக வெளியான புகைப்படமும் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.