ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (17:06 IST)

சமந்தா நடித்த யசோதா, ரிலீஸ் தேதி அறிவிப்பு!

yasodha
சமந்தா நடித்த யசோதா, ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபல நடிகை சமந்தா நடித்த யசோதா என்ற திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர் 
 
இந்த நிலையில் சற்று முன் யசோதா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா நாயகியாக நடித்த யசோதா படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் நவம்பர் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர் 
 
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் கேரக்டரில் சமந்தா நடித்துள்ள இந்த படம் திகில் கதையம்சம் கொண்டது என்றும் இந்த படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran