வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (22:03 IST)

மயக்கும் பொழுதே: சமந்தாவின் 'சாகுந்தலம்' படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்

shakundalam
சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள சாகுந்தலம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகிய சரித்திர கதைய அம்சம் கொண்ட இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற மயக்கும் பொழுது என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை அர்மான் மாலிக் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர் என்பதும் மணி ஷர்மா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த பாடலை வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படத்தில் மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 
 
Edited by Siva