புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (14:32 IST)

மச்சினனுடன் சமந்தா நெருக்கமா? புகைப்படத்தால் கிசுகிசுக்கும் டோலிவுட்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். 
 
சினிமா பின்புலம் கொண்ட பெரிய குடும்பம் என்பதால் சமந்தா சர்ச்சைகளில் சிக்காமல் பார்த்து பார்த்து பொறுப்போடு நடந்துக்கொள்வார். ஆனால் தற்போது கணவர் மற்றும் மைத்துனருடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையில் சிக்கியுள்ளது. மைத்துனர் அகில் சமந்தாவின் தோலில் கைபோட்டு கூலாக போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் பார்வையை வேறு மாதிரி மாற்றிவிட்டது.