செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (09:58 IST)

பாம்பை காப்பாற்ற நினைத்தேன்.. அது கடித்து விட்டது! – சல்மான்கான்!

பாம்பு கடித்ததால் இந்தி நடிகர் சல்மான்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்தியில் பிரபல நடிகராக உள்ளவர் சல்மான்கான். நேற்று தனது பண்ணை வீட்டில் இருந்த சல்மான்கானை பாம்பு கடித்ததால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது குணமடைந்துள்ளார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்க அளித்த சல்மான்கான் “நான் எனது பண்ணை வீட்டில் இருந்தபோது பாம்பு ஒன்று உள்ளே நுழைந்தது. நான் ஒரு குச்சியில் அதை எடுத்து வெளியே விட முயன்றேன். அப்போது அது என்னை கடித்துவிட்டது. தொடர்ந்து மூன்று முறை என்னை கடித்தது. அது ஒருவகையான விஷப்பாம்பு. 6 மணி நேரம் சிகிச்சை பெற்றேன், இப்போது நலமாக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.