வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 ஜூலை 2024 (08:21 IST)

தன் வீட்டுக்கு முன் நடந்த துப்பாக்கிச்சூடு… போலீஸில் பிரபல ரவுடி கும்பலின் பெயரை சொன்ன சல்மான் கான்!

சல்மான் கான் வீட்டின் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் இரு இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக விக்கி குப்தா (24), சாகர் பால் (21) என்ற இரு இளைஞர்களை மும்பை காவல் துறை கைது செய்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் சம்மந்தமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் தற்போது சல்மான் கான் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் “பிரபல ரவுடி கும்பலான பிஷ்னோய் கும்பல் என் வீட்டின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதாக நான் ஒரு சமூகவலைதளப் பதிவு மூலமாக தெரிந்துகொண்டேன்” என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் “என்னையும் என் குடும்பத்தினரையும் நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் கொலை செய்ய திட்டமிட்டனர்” எனவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.