ராவணன் நல்ல பக்கத்தை ஆதிபுருஷ் காட்டும் – சைஃப் அலிகானுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்!
ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார். 3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அனுஷ்கா சர்மா இப்போது கர்ப்பமாக உள்ளதால் பிரசவம் முடிந்து ஓய்வுக்கு பின்னர் இதில் அவர் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சைப் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் ராவணனின் நல்ல பக்கத்தையும் இந்த படம் காட்டும் எனக் கூறியுள்ளார்.
சைஃப் அலிகானின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் இப்போது கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து சைஃப் அலிகான் தனது கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.