தாத்தாவின் 85வது பிறந்தநாள் கொண்டாடிய சாய் பல்லவி!
பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய்பல்லவி. அதன் பின்னர் தமிழில் மாரி 2. கரு மற்றும் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்த சாய்பல்லவி அங்கு டாப் ஹீரோயினாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தனது தாத்தாவின் 85வது பிறந்தநாளை சாய்பல்லவி கொண்டாடியுள்ளார். அப்போது தாத்தா மற்றும் பாட்டியை அரவணைத்து ஆசி பெற்ற புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட தாத்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.