வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 டிசம்பர் 2020 (16:27 IST)

நடிப்பு சூப்பர் ஸ்டாருக்கு கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு அவரது பிறந்தநாள் அதிகம் கவனம் ஈர்க்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில் சில வாரங்களுக்கு முன்னர் அவர் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். இந்நிலையில் அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக உள்ளன.

இந்நிலையில் காலையில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் கிரிக்கெட்டின் கடவுள் என சொல்லப்படும் சச்சின் டெண்டுல்கர் ‘ஹேப்பி பர்த்டே தலைவா’ என டிவிட்டரில் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.