1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (11:56 IST)

விஜய்-நிர்வாகிகள் சந்திப்பு: எஸ்ஏசி ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

தளபதி விஜய் இன்று 30 மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வந்தன என்பதும் இதற்காக மாவட்ட நிர்வாகிகள் விஜய்யின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த ஆலோசனையில் விஜய் மக்கள் இயக்கம் மாநில பொருப்பாளர் புஸ்ஸி ஆனந்த் முக்கிய இடம் வகிப்பவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆலோசனை நடக்கும் கூட்டத்திற்கு செல்போன்கள் அனுமதி இல்லை என்றும் செல்போன்களை புஸ்ஸி ஆனந்த் ஆதரவாளர்கள் வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்றும் இந்த ஆலோசனை ரகசிய ஆலோசனையாக நடைபெறும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன 
 
மேலும் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள எஸ்ஏசி ஆதரவாளர்களுக்கு இந்த கூட்டத்தில் அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் போது முதலில் அரசியல் நிலவரம் குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும், அதன் பின்னர் புஸ்ஸி ஆனந்த் பேசுவார் என்றும் கடைசியில் விஜய் பேசுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மொத்தத்தில் இன்று விஜய்யிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளி வர வாய்ப்பு இருப்பதால் விஜய் வீடு அருகே செய்தியாளர்கள் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது