1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (08:21 IST)

தளபதி 65 படத்தை இயக்க விக்னேஷ் சிவனுக்கு சிபாரிசு – நயன்தாராவின் முயற்சி தோல்வியா?

விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க தனது காதலருக்காக நயன்தாரா சிபாரிசு செய்ததாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து ஏ ஆர் முருகதாஸ் விலகியதை அடுத்து அந்த படத்தை இயக்க பல இயக்குனர்களும் போட்டி போட்டனர். இப்போது கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் அந்த படத்தை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த படத்தை இயக்கும் வாய்ப்பை எப்படியாவது விக்னேஷ் சிவனுக்கு வாங்கித் தர  வேண்டும் என்று நயன்தாரா முயற்சி செய்ததாகவும், ஆனால் அது பலிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.