வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 நவம்பர் 2022 (18:22 IST)

பிள்ளை மனைவி என்று இருந்தால் பிரச்சனைதான்… விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பேச்சு!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் கடந்த சில ஆண்டுகளாக விஜய்யோடு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக விஜய்க்கு எதிரான கருத்துக்களை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்து வருகிறார். குறிப்பாக விஜய் பெயரில் அவர் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சம்மந்தமாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே வேறுபட்ட கருத்துகள் எழுந்ததும், எஸ் ஏ சி தன் கருத்தை விஜய் மேல் திணிப்பதுமே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பாக தொடங்கப்படட் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் “குடும்பத்தில் பிள்ளை மனைவி என்றாலே பிரச்சனை இருக்கும். அதனை சமாளிப்பதே கடினமானது” என பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு விஜய்யைதான் மறைமுகமாக குறிப்பிடுவது போல உள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன.