1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2017 (11:10 IST)

போராடி யு சான்றிதழ் பெற்ற எஸ் 3

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் எஸ் 3 படத்துக்கு போராடி யு சான்றிதழ் பெற்றுள்ளனர்.

 
யு சான்றிதழ் இருந்தால் மட்டுமே 30 சதவீத வரிச்சலுகை பெற முடியும். சிலர் இந்த சலுகையை பெரிதாக எடுத்துக்  கொள்வதில்லை. ஹரி தயாரிப்பாளர்களின் இயக்குனர். அவ்வளவு எளிதில் விடுவாரா?
 
தமிழக தணிக்கைக்குழு எஸ் 3 படத்துக்கு யுஏ சான்றிதழ் தந்தது. உடனே மறுதணிக்கைக்கு சென்று யு சான்றிதழ்  பெற்றிருக்கிறார். ஆக, எஸ் 3 யு சான்றிதழுடன் வெளியாகிறது.
 
படம் மொத்தம் 2 மணி 35 நிமிடங்கள் ஓடுகிறது. ஜனவரி 26 படத்தை வெளியிடுகின்றனர்.