1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (12:57 IST)

“தயாரிப்பாளர்களை அணுகுவது எப்படி”… S R பிரபு நடத்தும் ஒருநாள் பயிற்சி பட்டறை

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் S R பிரபு.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களை வைத்து படங்கள் மற்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என இரண்டு பாதைகளிலும் வெற்றிகரமாக செயல்படுபவர் எஸ் ஆர் பிரபு. ஒரு பக்கம் சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களைத் தயாரித்தாலும் மறுபக்கம் அருவி, மாயா போன்ற படங்களையும் தயாரித்து வருபவர். தற்போது அதிகளவில் ஓடிடிக்காக படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் உதவி இயக்குனர்கள் எப்படி தயாரிப்பாளர்களை அணுகுவது, முன் தயாரிப்புப் பணிகள் மற்றும் படப்பிடிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஆகியவற்றை செய்து முடிப்பது எவ்வாறு என்று உதவி இயக்குனர்களுக்காக ஒருநாள் பயிற்சி பட்டறை ஒன்றை நடத்த உள்ளார். இந்த வொர்க் ஷாப்பை தமிழ் ஸ்டுடியோஸ் ஒருங்கிணைக்கிறது. வரும் ஜூலை 31 ஆம் தேதி இந்த பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது.