புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (12:12 IST)

குஷி படம் இப்போ எடுத்திருந்தா? ரசிகரின் சந்தேகத்துக்கு பதிலளித்த எஸ் ஜே சூர்யா!

எஸ் ஜே இயக்கத்தில் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் உருவான திரைப்படம் குஷி.

இந்த படம் 2000 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால் அந்த படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்தார் எஸ் ஜே சூர்யா. அந்த மொழிகளிலும் வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்த படமாக இருந்தது. இந்நிலையில் அந்த படத்தின் க்ளைமேக்ஸ் ரயில்வே ஸ்டேஷனில் நடப்பது போல அமைக்கப்பட்டு இருந்தது.

சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர் இப்போது அந்த திரைப்படம் எடுக்கப்பட்டால் இருவரிடம் செல்போன் இருந்திருக்கும். அதனால் 15 நிமிடம் முன்னரே படம் முடிந்திருக்கும். ரயில்வே ஸ்டேஷன் காட்சிகள் எல்லாம் தேவையே படாது எனக் கூறியிருந்தார். அவருக்கு பதிலளித்த எஸ் ஜே சூர்யா ‘அப்படி எல்லாம் இல்ல.. மனக்கஷ்டத்துல ரெண்டு பேரும் போன் அ தொலச்சிருந்தா… ப்ரண்ட்ஸுக்கு மாறி மாறி போன் பண்ணா அவர்கள் ‘சிவா ஸ்டேஷனுக்கு போய்ட்டான்’ என்றோ ‘ஜென்னி ஸ்டேஷனுக்கு போய்ட்டா ‘ என்றோ சொல்லி இருப்பார்கள். அவ்ளோதான். கிளைமேக்ஸுக்கு ஏத்த மாதிரி நீங்கள் சீன் அ பில்ட் பண்ணனும் அவ்ளோதான்’ எனக் கூறியுள்ளார்.